மாற்றம் வேண்டும்

சரியா தவறா என தெரியவில்லை
நல்லதா கெட்டதா என தெரியவில்லை
ஆனால் நிகழ்ந்து விட்டது மாற்றம்
புது இளைஞர்கள் நாளை பதவியேற்றம்

தலைநகரில் நிகழ்ந்த மாற்றம் இனி
இந்திய நாடெங்கும் நிகழ வேண்டும்
எதிர்கால இந்தியா இளைஞர்கள் ஆள
மக்கள் நலம்வாழும் மாற்றம் வேண்டும்

ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும்
பழம்பெருமை பேசுவோர் பாடம் கற்கவேண்டும்
மக்கள் உரிமை பெற்றிட வேண்டும்
உண்மையான மக்களாட்சி மலர்ந்திட வேண்டும்

கொலையும் கொள்ளையும் குறைந்திட வேண்டும்
கற்பழிப்பு என்பதே இல்லாமை வேண்டும்
படித்தவர் வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டும்
பாரதம் பார்புகழ் படைத்திட வேண்டும்

எளிமை அரசியல் எழுச்சியுர வேண்டும்
வாரிசு அரசியல் ஒழிக்கபட வேண்டும்
உலகவங்கி கடன்முழுதும் அடைத்திட வேண்டும்
உலகத்தில் உன்னதம் அடைந்திட வேண்டும்

விவசாயம் செய்வோர் பெருகிட வேண்டும்
சாராய விற்பனை ஒழிந்திட வேண்டும்
தன்னிறைவு நாமும் அடைந்திட வேண்டும்
ஏற்றுமதி ஏணியுச்சியில் ஏறிட வேண்டும்

இலவசங்கள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்
வருமைகோடு என்பது அழிக்கப்பட வேண்டும்
இந்தியா வல்லரசு ஆகிட வேண்டும்
அனைவரும் அதற்காய் உழைத்திட வேண்டும்....

எழுதியவர் : சத்யா விக்னேஷ் (26-Dec-13, 2:34 am)
Tanglish : maatram vENtum
பார்வை : 821

மேலே