இந்திய அணி தோற்றால் வாடாதீர் ஜெயித்தால் ஆடாதீர்

மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது.

இந்திய கிரிக்கெட் வாரியம், "எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை" என்றது.

அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்!

ஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே...

"இந்தியா மட்டன் ஸ்டால்" , "இந்தியா கவரிங்", "இந்தியா சால்னா கடை" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.

இதற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை.

ஆகவே இந்திய அணி தோற்றால் வாடாதீர்! ஜெயித்தால் ஆடாதீர்!

எழுதியவர் : sakthi சிதறல் (26-Dec-13, 12:59 am)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே