மனிதன் மிருகமானால்
மனிதன் மட்டும் காக்கையாய் பிறந்திருந்தால்
காக்கைகளும் கொடுத்து தின்பதை
மறந்திருக்கும்........!
கா கா என்பதை மறந்து
தா தா என்றே கரைந்திருக்கும்!
மனிதன் மட்டும் நாயாய் பிறந்திருந்தால்
நாய்களும் நன்றி மறந்திருக்கும் ..!
சில்லரைகளுக்கே வால் ஆட்டியிருக்கும் ..!
.
மனிதன் மட்டும் கிளியாய் பிறந்திருந்தால்
கிளிகளும் கூட பொய் பேசியிருக்கும்..!
மனிதன் மட்டும் யானையாய் பிறந்திருந்தால்
யானையும் தன் தந்தத்தை
தானே விலை பேசியிருக்கும்..!
மனிதன் மட்டும் கொசுவாய் பிறந்திருந்தால்
கொசுக்களில் ஆண் கொசு மட்டுமே கடித்திருக்கும் !
அதுவும் பெண்கலையே குறிவைத்திருக்கும்..!
மனிதன் மட்டும் நுன்னுயிரியாய் பிறந்திருந்தால்
பிணங்களை தின்பதை விட்டு விட்டு அதுகள் கூட
புனங்களை தின்றிருக்கும்....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
