தன்னலமற்ற நட்பு வாழ்க

சிலரை
காரணமின்றியே
பிடித்துப் போகும்.....

சிலரை
காரணம் தேடினாலும்
வெறுப்புத்தான் மிஞ்சும்....

சிலரிடம்
நீண்டநாள் பழகினாலும்
புரிதல் எதுவுமிருக்காது....

சிலரிடம்
குறுகிய நாள் பழகினாலும்
நீண்டநாள் பழகியது போல
நெருக்கம் அதிகமிருக்கும்....

எந்தச் சூழலிலும்
காயப்படுத்தாத அன்பில்
உரிமையுடன் கூடிய
கண்ணியம் இருக்கும்...........

மனச் சுவரில் வரையப்படும்
நட்பு ஓவியங்கள்
அவரவர்க்கு ஏற்றபடி
அன்பின் ஆழத்தை புலப்படுத்தும்....!!!!
==============================================
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (28-Dec-13, 4:27 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 270

மேலே