நீயே தான்

காடு மலை ஏறி
வயல் வரப்பு கடந்து
ஆறு கடல் தாண்டி
குதித்து வரும் இளவஞ்சிக் கொடியே

வீடு வரை வந்து
வாசலில் நின்று
கதவைத் தட்டும்
அழகான் பொன் மயிலே


உன்னை எதிர்பாராது
சட்டென்று விழித்து
கண்ணைக் கசக்கும் போது நின்ற
தேன் மதுர இசைக் குயிலே


வருக என்று அழைத்து
வாய் நிறைய வந்தனம் கூறி
மனம் கசிந்து உருகும் நேரம்
வந்த கவின் மிகு பேரொளியே .


எனக்கு வழி காட்டும் திசையே
என்னிடம் என்ன சேதி சொல்ல வந்தாயோ
என்று நெகிழ்ந்து நெக்குருகி நின்ற வேளையிலே
உ ன் திவ்விய திருமுகமே திரு வாய் மலர்ந்தாய் .

புன்னகையுடன் வாய் திறந்தாய் பின்
அருளினாய் யாவற்றையும் நிறைவுடன்
அள்ளிக் கொடுத்தாய் குறைவில்லாமல்
கூத்தாடினேன் கொண்டாட்டத்தோடு
உன்னைக் கண்ட களிப்பிலே .


நீ யாரென்று எனக்கு தெரியவில்லையே
நீ யாராக இருந்தாலும் சரி என்ற போது
என் நெஞ்சம் சலனமில்லாமல் பேசியது.
இந்நேரம் நீ எதிர் கொண்டது உன்னேயே தான்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (31-Dec-13, 8:34 pm)
Tanglish : neeye thaan
பார்வை : 441

மேலே