புது வருடம் பூத்தது

இன்று பூத்தது புது வருடம்
சந்தோஷ உறவுகளுடன்
வாழ்த்தனும் வளங்கள் சேர
புது வருடத்தில் வசந்தம் காண
போற்றிடுவோம் புகழோடு இனி
புதுமைகளை நாம் கொண்டு
செங்கரும்பு தமிழாய் இனிக்க
தேன் மதுரம் உரிமை கொள்ள
பாமாலை சிந்து பாடி – இனி
பாடிடுவோம் களிப்பில் ஆடி
வசந்தமே நீ வா விரைந்து
வைகை தென்றலாய் படர்ந்து
என் மனம் வாழ்த்து கொண்டு
உண்மையாய் உனக்கு என்று
புது வருடம் பூத்தது இன்று
பொழிவாய் இறுதி வரை நின்று
வாழ்த்துகளுடன் .......................
ஸ்ரீவை.காதர் .