மனதில் பதிய பாடிய பாடல்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அளவு என்று இருத்தல் அதற்காகத்தானோ
அளவுடன் நிறைவாக இருத்தலே நியமம்.
அளவாக உணவருந்தி ஆரோக்கியமாக வாழ்தல்
அளவுடன் உடற் பயிற்சி செய்து திடமாக இருத்தல்
அளவு என்றாலே கச்சிதம் என்று கொள்.
செலவில் அளவு தொலை தூரம் செல்லும்
அதிகச் செலவு இன்னல் பெருக்கும்
அளவு கோலே எவற்றுக்கும் துணை என்று நினை
.
தோற்றத்தில் அழகு அளவுடன் அமைய
திருத்தம் என்று சொல்லே அளவாக அமைதல் என்று பொருள் பட
எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பது அளவு . என்று அறி
பழக்கமும், பழகுதலும் ஒரு அளவுக்குள்ளே அடக்கம்
தாண்டிப் போயின் அது கொச்சை படும் என்று நினைவில் கொண்டு
நிர்ணயமே இங்கு அளவு என்று புரிதல் அவசியம் .
அடக்கமே காணாத இவ்வுலகு மாந்தரிடம்
அளவு என்று சொன்னாலே வெறுப்படையும் மக்கள்
நியாயம் ,நிர்ணயம் , திருத்தம் என்று சொற்றொடர்கள்
மனதில் பதிய பாடிய பாடல்.