நெல்மணி

உழவனின் கண்ணீர் துளிகள்
மட்டும் நெல்மணியாய் மாறினால்
தான் வயித்தை கழுவுவதை விட்டு விட்டு
ஊருக்குதான் அன்னதானம் போடுவான்...!
அதைக்கண்டு தான் ஆனந்தம் கொள்வான்..
அன்னதானம் முடிந்ததும் கை கழுவி விடுகிறோமே ஒவ்வொருமுறையும்
நன்றி மறந்த நாய்கள் தானே நாம்...!
அவன் போட்ட பிச்சை தானே
நாம் சாப்பிடும் பச்சை அரிசி
நினைத்தாவது பார்போம்
கை நனைக்கும்போதாவது...!

எழுதியவர் : ஜெகன் (1-Jan-14, 9:05 pm)
பார்வை : 284

மேலே