காதலின் மெல்லிய இளங்காற்றினிலே
காலத்தின் வசந்தமாய்
காற்றினில் தென்ற்லாய்
வானத்தின் நீலமாய்
வடிவினில் முழுநிலவாய்
என்னுள்ளே வந்தமர்ந்து
இந்த இதய வீணையை மீட்டுகிறாள்
ஏதேதோ ராகங்கள் பாடுகிறாள்
அர்த்தமுள்ள அந்த மெளன சப்தங்களை
இதழ்களினால் மெல்ல மொழிகின்றாள்
இளவேனில் இனிய ராகங்களை
இந்த இதய வீணையில் மீட்டுகிறாள்
காதலின் மெல்லிய இளங்காற்றினிலே !
~~~கல்பனா பாரதி~~~

