என்ன செய்தாய்

நீ என்னை
என்ன செய்தாய்?
உன் அணைப்பிற்குள்
சிக்கி சின்னாபின்னமாகிறேன்!
சிறகேயில்லாமல்
பறக்கிறேன்
பறவையாக!

நான் வேண்டுமானால்
உன் தூண்டிலில்
சிக்கிய
மீனாக இருக்கலாம்?
நான் உன்னை
தூண்டிலென நினைக்கவில்லை
தூரிகையாகத்தான்
எண்ணுகிறேன்!

சிவனின் பாதியை
உமையவள்
எடுத்துக் கொண்டாள்
என்னில் மீதியையும்
சேர்த்தல்லவா
அணைத்துக் கொண்டாய்?
அம்சமாய் அரியாசனமிட்டு
பக்குவமாய்
அமர்ந்து கொண்டாய்!

உன்னை சுமப்பது
எனக்கென்றும் சுகமே!
உன்னை மட்டும்
சுமப்பதென்பது
அத்தனை சுலபமா?
நீ என்னை
சுமந்துப் பார்!
அப்பொழுது தெரியும்
உன்னை நான்
சுமப்பது..................!

.........................என் நிஜ கதாநாயகிக்கு..............!

.........................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (2-Jan-14, 9:11 am)
Tanglish : yenna seythaay
பார்வை : 470

சிறந்த கவிதைகள்

மேலே