காதலென்னும் சோலையினில்31
தாராவும் அவள் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும் போது வெளியிலிருந்து ஓர் குரல் வரவே இருவரும் அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்தார்கள்..........
அங்கு வெளியில் நின்றவள் ராஜலெக்ஷ்மி அவளை பார்த்ததுமே இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் முளித்துக்கொண்டிருந்தனர்.......
வா ராஜலெக்ஷ்மி என்ன திடீர்னு என்று தாரா கேட்டாள்.
நீ என்னிடம் பேசாதே இன்னொருத்தியின் கணவரை அடைய இப்படி கேவலமாக யோசிக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா! நான் உன்னிடம் பாசத்துக்காக தான் பழகினேன் நீ இப்படி எல்லாம் இருப்பாய் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று ஆவேசமாக கூறினாள்.
அப்படியே தாராவின் அம்மா பக்கத்தில் வந்து என்ன அத்தை அவதான் வாழ்க்கையை எப்படி அமைக்கணும்னு தெரியாம இருக்கான்னா நீங்களும் இப்படி பொறுப்பில்லாம இருக்கிங்களே!
ஒன்று மட்டும் நல்லா புரிஞ்சிக்கோங்க அத்தை உங்களுடைய இந்த கேவலமான எண்ணங்கள் எல்லாம் நிறைவேறவே செய்யாது......
என் அண்ணணுக்கு ஏற்றவள் கவிதா அண்ணி தான் வேற யாருக்கும் அந்த தகுதிகள் எல்லாம் கிடையாது.........
நான் உன் காலை சுற்றி சுற்றி வரும் நாய்னா சொல்கிறாய் இனிமேல் என் வீட்டு பக்கமோ கம்பேனி பக்கமோ வந்திராதே என்று தாராவிடம் கட்டளையோடு கூறினாள்.........
நீ இவ்வளவு கேவலமானவள் என்றுதெரியாமல் உன்கூட சேர்ந்து நானும் என் அண்ணியை தவறாக அவர்கள் மனம் புண்படும்படியாக பேசியிருக்க்றேன் இருந்தும் அவர்கள் என்னை மன்னித்து பாசமாக
நடந்து கொள்கிறார்கள் நீயும் இருக்கியே...........என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.....................
ஒரு நிமிடம் என்று தாரா அழைக்க திரும்பினாள் ராஜலெக்ஷ்மி.......
இப்போ சொல்றேன்டி உன் அண்ணனை நான் என்வசப்படுத்தி திருமணம் செய்து அந்த பிச்சைக்காரியை ஊரை விட்டு என்ன இந்த உலகத்தை விட்டே அனுப்புறேன் என்று ஆக்ரோஷமாக கத்தினாள்........
அப்போது தாராவின் தாய் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள், இதை சற்றும் எதிர் பார்க்காத தாரா கோவமாக உள்ளே சென்றாள்.........
என்னை மன்னித்திடும்மா தெரியாம பொறுப்பில்லாமல் அவளை அவள் விருப்பத்துக்கு வளர்த்துவிட்டேன் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் நீ இங்கு நடந்தது பற்றி எதையும் வீட்டில் சொல்லாதே அவர்களின் மனமும் கஷ்டப்படும் என்று அழுதுகொண்டே கண்ணீரோடு அவள் கால்களை பற்றினாள்...........
என்ன அத்தை நீங்கள் போய் என் காலில் எல்லாம் விழுறிங்க என்று அத்தையை ஆறுதல் கூறி அவளை திருத்தி நல்ல பொண்ணாக மாற்றுங்கள் அத்தை நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.........
தொடரும்.......................