காதலென்னும் சோலையினில்32
தாராவின் வீட்டிலிருந்து தன்வீட்டிற்கு வந்த ராஜலெக்ஷ்மிக்கு மனதில் பல கேள்விகள்!!!!!!!!!!!!!!!!!!!
அண்ணி ஏற்கனவே நம் ஊருக்கு வந்து அண்ணனை பார்க்க முடியாமல் திரும்பி சென்றிருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அண்ணன் மீது அவர்களுக்கு கோவம் இருக்கும்;
அதுமட்டுமில்லாமல் தாரா அண்ணனைப்பற்றி தவறாகவும் சொல்லி கொடுத்திருக்கிறாள் என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே ஒரு கவிதாவின் அறைக்குள் சென்றாள்................
பேக்டரியில் யோசனையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
"இன்னிக்கு எப்படியாவது கவிதாவை தாரா வீட்டிற்கு அழைத்து சென்று கவிதாவிடம் ரொம்ப அன்யோன்யமா இருக்கிற மாதிரி தாராவின் முன் நடிக்க வேண்டும்"
அப்போதுதான் தாரா என்னை மறந்து புது வாழ்க்கையை தொடங்குவாள், அதுமட்டுமில்லாமல் அவளை சமாதானப்படுத்த அத்தையிடம் தெளிவாக பேசலாம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு மெல்ல நடக்க ஆரம்பித்தான்.....................
கவிதாவின் அறைக்கு சென்ற ராஜலெக்ஷ்மி கவிதா தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை கேட்டதும் அப்படியே நின்று
விட்டாள்...........
கவிதா போனில் தன் தோழியிடம்" இல்லடி நான் ராஜாவிடம் பேசவில்லை",
எப்பவாது தேவைக்கு பேசுறதோட சரி மற்றமாதிரி பேசல கவி சொல்கிறாள்.
பழையதை விடு என்று தோழி சொல்ல; எப்டிடி விடமுடியும்..........என்று
இவள் கூற சீரியசாக இருவரும் பேசி கொண்டிருந்தனர் ..........
என்னிடம் நல்லவன் மாதிரி பேசி நடித்து என்னை ஏமாற்றிவிட்டு, ஊருக்கு வந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறான், அந்த சமயம் பார்த்து அவன் அப்பா இறக்கவே திருமணம் தடைபட்டிருக்கிறது.
ஐயோ! இவ்ளோ நடந்திருக்கா? என்று ஆச்சரியத்துடன் தோழி கேட்க.
அதுமட்டுமா அந்த பொண்ணை ஏற்கனவே அவன் காதலித்திருப்பதாகவும் இன்னும் நிறைய பொண்ணுங்களை ஏமாற்றியிருப்பதாகவும் அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என்னிடம் சொன்னாள்.
நான் அவனைத்தேடி செல்லும் போது என்னை ஒருமுறை கூட பார்க்க அனுமதிக்கவில்லை அந்த பெண் அவ்ளோ உரிமையுடன் இருந்தாள்.
நீ ஒரு முறை நேரடியாகவே ராஜசேகரனிடம் கேட்டு விடு என்று தோழி கூறவே!
வேண்டாம்டி கேட்கவேண்டிய அவசியம் இல்லை நானே தினமும் பார்க்கிறேனே; அவர்கள் இருவரும் தினமும் சந்தித்து பேசுவதும் அருகில் உட்கார்ந்து சாப்பிடுவதும் என தினமும் நடந்து கொண்டிருக்கிறது..............
பேசாம ஊருக்கு கிளம்பலாம் என்றால் அப்பா அம்மாவை நினைத்து வருத்தமாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் அத்தையும் அவருடைய தங்கையும் என்னிடம் மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள் பேரனுடனும்தான்;
இப்படி இருக்கும் போது நான் இங்கிருந்து வந்தால் ஓடுகாலி என்று தவறாக நினைத்துக்கொள்வார்கள் என்று கண்களில் கண்ணீருடன் பதிலளித்தாள்.
சரிடி வருத்தப்படாதே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே; உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று எச்சரிக்கையுடன் சொல்லி விட்டு அப்புறம் பார்க்கலாம் என்றாள் கவிதாவின் தோழி...........
சரி என்று சொல்லிவிட்டு கவிதா போனை வைத்துவிட்டு திரும்ப பக்கத்தில் ராஜலெக்ஷ்மி..........
தாராவின் தாய் ராஜலெக்ஷ்மியின் முன் வைத்து அவளை அடித்ததும் அடிபட்ட புலி போல் மிகவும் கோவமுடன் என்ன செய்யலாம் என்று தொலைபேசியை எடுத்து யாருக்கோ பேசிவிட்டு ஹென்ட் பேக்கை எடுத்து விட்டு தன் தாயிடம் வந்து பணம் வேண்டும் என்று கேட்டாள்.
எதுக்குடி இப்போ பணம் என்றாள்.
வேணும் என்று திமிராக பதிலளித்தாள்....
பணமெல்லாம் தரமுடியாது,அதான் உனக்கு தேவையானதெல்லாம் நான் வாங்கித்தருகிறேன் இல்ல அப்புறம் எதுக்கு பணம் என்று அதட்டலாக கேட்க?
தாயை மதிக்காமல் பீரோவிலிருந்து எடுக்க சென்றாள்........தடுக்க முயன்ற தாயை கீழே தள்ளி விட்டு பணத்தை எடுத்து விட்டு வெளியே சென்றாள்................
தொடரும்..........

