தமிழ்

ஒரு மலையாளி மலையாளப் பாடல் கேட்கிறான்,இந்திப் பாடல் மற்றும் தமிழ் பாடல்களும் கேட்கிறான்,

ஒரு ஆந்திராக்காரன் தெலுங்குப் பாடல்,தமிழ் பாடல்,மற்றும் இந்திப்பாடல்களைக் கேட்கிறான்.

ஒரு கர்நாடகாவைச் சேர்ந்தவன் கன்னடப் பாடல்கள், இந்திப்பாடல்கள்,கொஞ்சமாக தமிழ்பாடல்களும்கேட்கிறான்.மேற்சொன்ன மூவரும் தமிழனைப் பார்த்து கேட்டார்கள்.

நீ தமிழ் பாடல்கள் மட்டும்தான் கேட்பாயா அல்லது அவ்வளவுதான் உன் அறிவா என வினவினர்.

அதற்கு பதிலாக அந்த தமிழன் சொன்னான்:

உங்கள்மொழியின் வளம் அவ்வளவுதான் போலும். என் மொழியில் கற்றுக்கொள்ள இன்னும் வளம்வாய்ந்த சொற்களும் சொல்லாடல்களும் உள்ளன.அதை கற்கவே அல்லது கேட்கவோ என் ஆயுள் போதாது.இதனால் வேறு மொழி பாடல்கள் மீது ஈர்ப்பு தோன்றவில்லை என்றான்.

இந்த பதில் சமாளிப்புக்காக சொல்லப்பட்டதல்ல.வேறு மொழிகள் மண்டையில் ஏறாததாலும் சொல்லப்பட்டதாகவும் இருக்கலாம்..

எழுதியவர் : Akramshaaa (2-Jan-14, 5:30 pm)
Tanglish : thamizh
பார்வை : 189

மேலே