உழைப்பின் அருமை
ஒரு நாட்டில் ராஜாராம் என்ற பெரிய அரசன் இருந்தான் .....மிகவும் பணக்காரன் ....இவன் மகன் வீரவன் .....இவன் மிகவும் செலவாளி
வீரவனுக்கு பணத்தோடு அருமை தெரியவெண்டும் . என்பதற்க்காக வீரவனை வேலைக்கு போக சொன்னார் ...
வீரவன் வேலைக்கு போகவே பிடிக்காது ....இருந்தாலும் தந்தை பேச்சை கேட்பதற்க்காக வேலைக்கு செல்வதுபோல் நடித்தான் ...
இரவு வீட்டிக்கு வந்தான் .....
ராஜாராம் என்னடா வேலைக்கு போனியா என்று கேட்டார் .....ஆம் என்று வீரவன் கூறினான் ...
சம்பளம் எங்கை என்று கேட்டார்
தன்னுடைய அக்கௌண்டில் இருந்து 500 ரூபாய் எடுதுட்டு வந்து வேலை செய்த பணம் என்று கொடுத்தான் ...
ராஜாராம் அதை தீயில் போட்டார் ......
வீரவன் நம்ம கணக்கு முடிந்துவிட்டது என்று மனதில் நினைத்து கொண்டு மாடிக்கு சென்றான் .......
மறுநாள் ஆனது அதை போல் வீரவன் வேலைக்கு செல்வதுபோல் நடித்தான் அக்கௌன்ட்லிருந்து பணத்தை எடுத்து , நான் வேலை பார்த்த சம்பளம் என்றான் ......ராஜாராம் அதை தீயில் இட்டார்
வீரவன் நம்ம கணக்கு முடிந்துவிட்டது என்று மனதில் நினைத்து கொண்டான் ...
இப்படி 4 வருடம் போனது அக்கௌண்டில் பணம் காலியானது .....
உண்மையாகவை வேலைக்கு போகவேண்டிய சூழ்நிலை வந்தது ......வேலைக்கு சென்றான் ...
வரும் போது போது 50 ரூபாய் கொண்டு வந்தான் ....
ராஜாராம் தீயில் போட்டார் .....உடனை வீரவனுக்கு பயங்கர கோவம் வந்தது .....என்னப்பா நீங்க இப்படி பன்னுறேங்க ? கொஞ்சம்மாவது அறிவு இருக்கா என்று அழுது கொண்டே கேட்டான் .....
அதற்கு அவர் மகனை நீ அன்று 500 ரூபாய் தரும் போது நான் தீயில் இட்டேன் நீ ஓன்று ம் சொல்லவில்லை .....இப்போ 50 ருபாய்தானை தீயில் இட்டேன் ......ஏன் இப்படி கோவ படுகிறாய் என்று கேட்டார்
அதற்கு வீரவன் போங்கப்பா உங்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவு கஷ்ட பட்டேன் தெரியுமா என்று அழுது கொண்டே போனான் .....
ராஜ ராம் சந்தோஷ பட்டார் தன் மகனுக்கு இப்போதான் ரூபாய்யோட அருமையே தெரியுது ?
சிரித்து கொண்டே போனார்...
கருத்து : என்னதான் பொருள் வாங்கினாலும் நாம் உழைத்து வாங்கினால் மட்டுமே அப்பொருள் நம்மிடம் இருக்கும்