Facebook பைத்தியம்
காலேஜ் முடிஞ்சதும் hostel க்கு வந்தான் சிவா. பொங்கல் விடுமுறை மறுநாள்.
அக்காவுக்கு குழந்தை பிறந்து பத்து நாளிருக்கும், மாமா, குட்டிபாப்பாவ facebook ல போட்டோ எடுத்து காட்டிருந்தார். அன்றிலிருந்து அவள் கன்னத்தை தொட்டு விளையாட ஆசையோடு காத்திருந்தான் சிவா.
இரவு பத்து மணிக்கு பஸ். நல்ல வேளையாக மழை பெய்ய தொடங்குவதற்கு முன்பே வந்தாயிற்று. தன் இருக்கையை சரி பார்த்து அமர்ந்தான்.
காலேஜிலேயே தூங்கியாச்சு இனிமே எங்கிருந்து தூக்கம் வரும்?? சரி facebook பார்ப்போம்னு மொபைல எடுத்தான் .ரெண்டு நாட்களுக்கு முன்பு போட்ட status . ஒரே ஒரு like தான். அதே statusa ஒருத்தி share பண்ணிருந்தா. யாருடா அந்த பொண்ணு னு ஆர்வ கோளாறுல அவ profile க்கு போனப்போ ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவளுக்கு அறுபது likes . அட போங்கடா நீங்களும் உங்க likes உம்னு அலுத்துகொண்டான்.
பரீட்சை இருந்ததால ரெண்டு நாளா farmville விளையாடல. ஆடு மாடு எல்லாம் கொலப்பட்டினியா இருக்கும்.சரி அவைகளுக்கு முட்டை பால் வைக்கணுமே னு அத open பண்ணா
எல்லா பயிரும் அறுவடைக்கு தயார இருந்தது. அறுவடை களைப்புல நேரம் போனதே தெரியல.
சரி வந்தது வந்துட்டோம் அப்படியே அந்த criminal case உம் investigate பண்ணிடுவோம். சின்னதா ஒரு promotion கிடைச்சதில் ips officer ஆனது போல் ஆனந்தம். அடுத்த case போலாம்னா உன்னோட energy முடிஞ்சு போய் ஆறு மாசம் ஆச்சுனு டாட்ட காட்டிட்டாங்க.
சரி இனி வேற வழியே இல்ல தூங்கலாம்னு தோன்றிய போதுதான் அருகில் இருந்த முதியவர் தம்பி வெளிச்சமா இருக்குப்பான்னு அதட்டினார். பெரியவர் பாவம் நமக்கு எதற்குன்னு மணிய பாத்தா பன்னிரண்டை தாண்டிருந்தது.
status போடாத ஆணும் அத share பண்ணி லைக் வாங்காத பெண்ணும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல என்பதால் என்ன அப்டேட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தான். போன வாரம் இறந்து போன நெல்சன் மண்டேலா நினைவுக்கு வரவே RIP NM னு upate பண்ணான். rip status க்கு மட்டும் தான் அஞ்சு like ஆச்சும் வரும்னு அவனுக்கு தெரியும் . பாட்டு கேட்டா தான் பஸ்ல தூக்கம் வரும்னு headseta காதுல மாட்டிகொண்டான் சிவா . ரஹ்மான் மியூசிக் play பண்ணியாச்சு . கொஞ்ச நேரம் தான் அயர்ந்து தூங்கி விட்டான். பயணிகள் தேநீர் அருந்த பஸ் நிறுத்தப்பட்டது, கண் விழித்து பார்த்தபோது தான் தொங்கி கொண்டிருந்த headset இல் பாடல் கேட்கவில்லை என்பதை உணர்ந்தான் . charge இல்லையோ னு பாத்தா mobile லே இல்லாமல் போய்விட்டது.
திடுக்கிட்டு போய் தன் பையை பார்த்தால் அதுவுமில்லை. அருகிலிருந்த பெரியவரையும் காணவில்லை. அடபாவி இதற்கு தான் ஆசைபட்டாயா என்ற சந்தேகத்துடன் விசாரித்தான். அவர் அப்போதே இறங்கிவிட்டார்னு கேள்விபட்டதும் சிவாவுக்கு அனைத்தும் புரிந்தது. பணம் பெருசா பையில் இல்லை நல்ல வேளை purse சட்டையில் இருந்ததால் தப்பித்தது. செய்வதறியாமல் விழித்தான். மதுரை பேருந்து நிலையம் வந்ததும் காதிலிருந்த headseta எடுத்து சட்டைப்பையில் வைத்து கொண்டான். போனால் போகட்டும் போடா என்ற பாடலை முணுமுணுத்து கொண்டே வீட்டுக்கு நடந்தான். போனதும் முதல் வேலையாக im robbed னு ஒரு update பண்ணான் . அடுத்த நொடியே என்ன ஆச்சி மச்சி? take care, all is well னு ஏகப்பட்ட comments . அட நம்ம accounta என்ற ஆச்சிர்யத்தோடு பதிலளித்து கொண்டிருந்தான் சிவா .
"வந்ததும் வராததுமா என்னடா நோண்டிட்டு இருக்க அங்க?? "என்ற அக்காவை திரும்பி பார்த்தான். மடியில் ரோஜா பூ போன்ற அவள் குழந்தையை பார்த்ததும் அடுத்த profile picture இவகூடதான் னு குழந்தையை கொஞ்ச தொடங்கினான்.
இப்படிக்கு,
### வேலைவெட்டி இல்லாமல் Facebook இல் ரவுசு பண்ணுவோர் சங்கம் ###