காதல் தோல்வி

காதல் தோல்வி-

கற்பனையில் காதல் வளர்த்தேன் கண்ணெதிரே அவளை கண்டதும் காதலை சொல்லவில்லை கல்நெஞ்சகாரி மறுத்து விடவாலோ? என்று
அவள்புன்னகை செய்கையில் தொலைந்து விடுவேன் அந்த ஓர் நிமிடம் நிலைக்கவில்லை என் வைராக்கியம் எப்படியோ? அவளிடத்தில் விரும்பவதாய் சொல்லி அவளின் அன்பை பெற்றேன் கைப்பேசி குறுஞ்செய்தியும் கொஞ்சும் பேச்சும் விடியலாகி போனது தினமும் உறக்கமின்றி ஆசையாய் நான்தந்த அன்புபரிசை எனது நினைவாய் அவள் வைத்திருப்பதும் அவள் தந்த முத்தங்கள் ஆயிரமாகுமா? என்று நான்கனவு காண்பதுமாய் நாட்கள் நகர்ந்தது அவைகள் யாவும் நினைவுகளாய் நெஞ்சில் ஆசைகளை சுமர்ந்து அன்றொருனாளில் தனியாய் அவளிடத்தில் பேச கண்களை கசக்கி நின்றால் கையில் பத்திரிக்கை நீட்டி மன்னித்து விடு பெற்றோரை எதிர்க்க இயலவில்லை நாளை நானோ? இன்னொருவன் மனைவி என்றாள் ஓர் நிமிடம் மரமாகி போனேன் உள்ளத்தில் அவளை சுமர்ந்து பைத்தியக்காரனாய் நானும் என் தோற்றுபோன காதலுமாய்.....!

எழுதியவர் : இரா.இராஜசேகர் (2-Jan-14, 10:42 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 329

மேலே