என்னை சுமப்பவள்
சுமந்தும் சுமையறிந்தும்
சுவையூட்டும் உணவளித்தும்
என்னை தன் இதயத்தில்
பொறித்தவள் !
போதுமென்று சொன்னாலும்
போதிய அறிவை
ஊட்டியவள் !
இன்று போதையில்
உலவுமென்னை வாரியணைக்கிறாள் !
தன் நெஞ்சோடு ......
பஞ்சு போன்ற அவள்
இதயத்தை ஏன் கயமுறச்
செய்கின்றேனோ?
கவலை எனக்கு மட்டும் சொந்தமல்ல...
ஏன் தாய்க்கும் உரியதே !
அதனால்தான் அவள் மனமறிந்து
நடக்கிறேன்..........
அவள் மடிமீதே கிடக்கின்றேன் இன்று !
எங்கும் கிடைக்காத இன்பம்
!!!..........."அம்மா"..........!!!
அவள் அருகில் இருந்தால்
அனைத்துமே சும்மா ........