உறங்காத இரவுகள்
இதமான நேரம் மனபாரம் போகும் தூரம்
புது உலகிற்கான சாரம் வந்து நிற்கும் இரவே
இத்தருணம் இவ்வுலகில் இவர்களின்
இதயத்தில் உன்ஆட்சிகள் பலமுகம்
விடிந்தால் திருமனமென காத்திருக்கும் காதலர்களுக்கு எப்போதுயென ஏங்கவைக்கிறாய்
தன் ஆருயிர் கணவன் இறந்து சிதைமூட்ட இனி விடியல் எப்படியென ஏங்க வைக்கிறாய்
நாளை முதலாய்த் தன் காதலை வெளிப்படுத்த நினைப்பவனை கற்பனைகளில் வாட்டுகிறாய்
காதல் தோல்வி அடைந்தவனை விடியல் வேண்டாமென துடிக்கவைத்து வாட்டுகிறாய்
விடிந்தால் என் வெற்றியை நாடே போற்றுமென வெற்றியின் விடியலுக்காய் புலம்பவைக்கிறாய்
விடிந்தால் என் தோல்வியை நாடே தூற்றுமென தோற்றவனை தூங்காமல் புலம்பவைக்கிறாய்
புரிதலில் ஒன்றாகி திருமணத்தில் இணைந்த தம்பதிக்கு காமத்தை மூட்டுகிறாய்
புரிதல் சிறிது தவறிட திருமணமான
தம்பதிக்கு கோபத்தை மூட்டுகிறாய்
முதல் பணியில் சேர இருப்பவனை தன்
நாளை நினைத்து கனவுகள் காணவைக்கிறாய்
தன் பணி ஓய்வுநாள் காண இருப்பவனை இனி மீதமான நாட்களென கனவுகள் காணவைகிறாய்
தன்வாழ்வில் வரமாய் பெற்ற குழந்தையை பார்த்து மகிழ தாய்க்கு தூக்கம் தூரம் வைக்கிறாய்
தன்வரத்தின் குழந்தை பிரிந்த துயரத்தில் தாய்க்கு வேதனையில் தூக்கம் தூரம் வைக்கிறாய்
ஓர் இரவில் ஒவ்வொரு மனத்திலும்
எத்துனை எத்துனை உணர்வுகள் -எல்லா இரவுகளும் உறங்கிக்கொண்டில்லை
இரவுகள் விடியலுக்கான விதையை
மனத்துள்ளே பதித்துக்கொண்டிருக்கிறது.
...கவியாழினிசரண்யா...