பொய் அறியா மனது
மண்ணின் பல நிறம் தெரிந்து கொண்டேன்
மரத்தின் நிழலில் நின்று கொண்டேன்
மனிதனின் மந்திரம் அறிந்து கொண்டேன்
மனதில் வலியை புரிந்து கொண்டேன்
மர்மத்தின் எல்லையை கண்டு கொண்டேன்
மக்களின் உணர்வால் தெளிந்து கொண்டேன்!
மகிழ்ச்சியில் பலதை உளறி விட்டேன்
மலரின் மென்மை உணர்ந்து விட்டேன்
மாறிடும் தந்திரம் கற்று விட்டேன்
மனிதத்தை புதைத்திட மறுத்து விட்டேன்
மறுபடியும் உண்மை தான் பேசி விட்டேன்
மாலவனே உன்னிடம் சேர்ந்து விட்டேன்
மரணத்தை உயிருடன் அறிந்து விட்டேன்
மறந்தும் பொய் இல்லை சொல்லி விட்டேன்!

