நினைவலைகள் 2

நினைவலைகள் 2

அழகிய காலைப்பொழுதது
விடுமுறை காலமும் கூட
மூன்றாவது முடித்த தருணம்
நண்பர்கள் முடிவெடுத்து
கொள்ளிட காற்றை
சுவாசிக்க முடிவெடுத்தோம்
நான்கு பேர் கொண்ட குழுவது
வீட்டில் சொல்லாத
இரகசிய பயணம்
ஒருமைல் தொலைவில்
கொள்ளிடம் ஆறு
கொள்ளை அழகை
கொண்ட ஆறு
விறுவிறுப்பாய் பயணித்தோம்
நண்பனின் படுகை
தோப்பு அது
அழகிய மாமரங்களின்
தொகுப்பு அது
கல்லாமணி மாங்காய்
முதல் இலக்கானது
ஆசைதீர ருசித்தோம்
பழதாகம் தீர்ந்தது
நீர்தாகமோ துளிர்த்தது..
என்ன செய்வது
தாகம் தணிக்க..
அவசர தாகம்
ஆட்டிப் படைத்தது..
வேகமான பயணம்
தொடங்கியது ஆற்றை
நோக்கி ஆவேசமாய்..
வேலி தாண்டினோம்
வேக வேகமாய்..
ஊற்று தண்ணீர்
பருக நெடுநாள்
ஆசை நெஞ்சினில்..
ஆற்று நீரை தேடும்
ஆர்வத்தை விட
ஊற்று நீரின்
மோகம் தலைக்கேறியது..
தீராத தாகத்தால்
தோண்ட துவங்கினோம்
மணலை வேகமாய்..
அட ஆச்சர்யம்
உடனே நீர்
வெகு அருகினில்..
ஊற்று நீரை
உதடுகள் முத்தமிட
தொடங்கின தாகம்
முழுவதும் தணியும்வரை..
மெல்ல ஓடினோம்
சூடான மணலில்
சுகமான காற்றோடு
முத்தையன் குழியை
அடைந்தோம் ஆர்வத்துடன்
ஆம்.. முதலையை
காணும் ஆர்வத்துடன்
எண்ணியது வீண்போகவில்லை..
முத்தையன் குழி
குளத்து நீரில்
குளித்து முடித்த
முதலை மெல்ல
தரை ஏறியது..
குளிர் காய்ந்திட
வாழ்வின் பேரதிசியத்தை
கண்ட கர்வம்
தலைக்கேறியது தாறுமாறாய்..
கர்வ போதையுடன்
கால் பதித்தோம்
வீட்டிற்குள் மெதுவாய்
தடல் புடலாய்
வரவேற்பு வீட்டினில்
தாத்தா முதல்
தங்கை வரை
விடாமல் அடித்தனர்
உடல் பழுத்தாலும்
உதை வழுத்தாலும்
மனம் மறக்கவில்லை
அந்த சாகச
பயணத்தை சுகமாய்..

#நினைவலைகள்#

எழுதியவர் : ஆரோக்யா (3-Jan-14, 9:46 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 69

மேலே