படமே பாடமாகட்டும்

​மனிதருள் சாதிஇன கலவரம்
மண்ணில் நாளும் இது நிலவரம் !

நட்புணர்வு மறைந்தது இங்கே
பகையுணர்வே வளருது இங்கே !

மானின் உணர்வும் காட்சியாய்
காகமுடன் கனிவு சாட்சியாய் !

ஐந்தறிவும் அறியாது சாதிஇனம்
ஐக்கியமாகுது அன்பால் இங்கே !

ஆறறிவுக்கோ பிரிவினை எண்ணம்
ஆற்றாமையே அன்றாட நிகழ்வால் !

மாறிடுவோம் மானை பார்த்து
மறந்திடுவோம் மாச்சர்யங்களை !

படமே நமக்கு ஒரு பாடமாகட்டும்
பாரினில் என்றும் நிலைக்கட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Jan-14, 8:30 am)
பார்வை : 105

மேலே