“ பத்திகிச்சி “

தோள் சாய் என்றேன் – உன்
தோள் சாய்த்து
எனை இம்சிக்கிறாய் ...

அடி கள்ளி
உன் கருங்குவளை விழிகொண்டு
கள்வன் என்னையே
களவாடிச் செல்கிறாய் ...

கனியிதழ் வருட
என் விரல் துடிக்க – உன்
ஓரப் பார்வை அதை
ஒடித்துப் போடுகிறதே....

பூக்களெல்லாம்
செய்த சிகையழகும்
உன் மத்தாப்புச் சிரிப்பின் முன்
மங்கித்தான் போனதடி !

பசுமையெல்லாம்
ஆடையாகி - உந்தன்
மேனியைத் தழுவுதடி ...

கர்வம் கொண்டு
இருந்த என்னைக்
கைகட்டி நிற்க வைத்தாய் ..

ஆசை முத்தம் ஒன்று கேட்டேன்
அதில் அனலாகித் தகிக்கிறாயே ...
சிக்கி முக்கி கல்லைப் போல
கிட்ட வந்து வந்து உரசுறியே ...!

எழுதியவர் : தமிழன்பன் என்றும் புதியவ (5-Jan-14, 9:25 am)
பார்வை : 122

மேலே