புதுப்புறம் நானூறு 9

9. அறவழிப் போர்

பசுக்களும் , பெண்களும்
பார்ப்பார் , பிணியாளர்களும்
படை திரண்டு போர் செய்யும் நேரத்தில்
பாதுகாப்பான இடம் செர்க என்று
பாசமான நாடுமேல் அக்கறையும்

கொள்கைகளும் வீரமும் கொண்ட
கொற்றவன் முதுவழுதி வாழுகவே !

கூடிடும் முக்கடலுக்கு முந்நீர் விழாஎடுத்து
கூத்தாடு பவருக்கு பொன்முடி கொடுத்து
கூறிடும் உதவிகள் பலசெய்த மன்னவனே

குமரி மலை பஃறுளி போல்
குறைவிலாது வாழுகவே !

திணை : பாடான்
துறை : இயன்மொழி
பாடியவர் : நெட்டிமையார்
பாடப்பட்டவர் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (5-Jan-14, 10:14 am)
பார்வை : 97

மேலே