புதுப்புறம் நானூறு 8
8. சூரியனுக்கு ஒப்பாகாதவன்
காயும் கதிரவனே நீ
காடுடன் பிற நாடுகளையும்
காப்பாற்றிக் கோடை புரிந்து
விசயங்கள் பலவற்றால் நாட்டையும்
விரிவுப் படுத்தி ஆட்சி செய்து
வீரத்தின் மறு பெயரென
விளங்கி நிற்கும் மன்னவனுக்கு
ஒருபொழுதும் உன் வாழ்வில்
ஒப்பாகிட மாட்டாய் ! நீ
ஒளிந்திடுவாய் மலை நடுவில்
ஓடிடுவாய் இரவுகளில்
பகற்பொழுதில் மட்டும் தான்
பளிச்சென்று ஒளிர்ந்துடுவாய் !
பகைவன் யாராக இருந்திடினும்
பாய்ந்து அவரின் மார் கிழிக்கும்
சேரமான் வாழியாதனுக்கு ஒப்பாய்
செங்கதிரும் வீசமாட்டாய் !
திணை : பாடான்
துறை : இயன்மொழி
பாடியவர் : கபிலர்
பாடப்பட்டவர் : சேரமான் கடுங்கோ வாழியாதன்
விவேக்பாரதி