புதுப்புறம் நானூறு 7

7. கொள்ளையடிப்பவன்

களிறுகளை செலுத்தும் தாள்களையும்
கழல்கள் ஆடும் கால்களையும்
கயவர்களை அழிக்கும் சிந்தனையும் கொண்ட
கரிகாற் பெருவத்தான் ஆகிய நீ !

பகைநாட்டில் மூடிய சுடரொளியில்
பாதிப்புறும் அரசர்களின் ஓலங்கள்
பரவி எங்கும் கேட்டிடினும் !அதையொரு
பகட்டாக மதிக்காமல் ஊரைக் கொள்ளையடிப்பாய்

நாடு கடந்து வரும்
நற்புனலை மண்ணால்
நடுவே தடுக்காமல்
நல்லழகு மீன்களால் தடுக்கும்

உன்னை எதிர்பவர்கள்
உருசிதைந்து போவார்கள்
உலகில் உன்னை பகைப்பதற்கு
உற்றவன் ஒருவனும் இல்லை மன்னவனே !

திணை : வஞ்சி
துறை : கொற்றவள்ளை
பாடியவர் : கருங்குழல் ஆதனார்
பாடப்பட்டவர் : சோழன் கரிகாற் பெருவத்தான்

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Jan-14, 9:01 pm)
பார்வை : 96

மேலே