கூர்ப்பு

ஜல்லிக் கட்டு
கபடி
சடுகுடு
பல்லாங்குழி
உதைபந்து அருகி
நெட்கேம் ஆச்சு

வேப்பங்குச்சி
உமிச்சாம்பல்
பற்பொடி
கோல்கேட் போய்
மௌத்வாஷ் மூச்சு

மஞ்சள்
சந்தனம்
கடலைமா
மருதாணி போய்
க்ரீம் லோஷன்
ஷம்பூவாச்சு

தயிர் சாதம்
இட்லி தோசை
பிட்டு மறைந்து
பிட்சா -மக்
டொனால்ட்ஸ்
பேச்சு

வெண்பா
நல்வழி
மரபு புது கவி
மாறி
வை திஸ் கொலைவெறி
எனும் நிலையாச்சு .

புடவை பாவாடை
தாவணி சுடிதார்
பாண்ட் சட்டை
உயர்ந்து
நீச்சல் உடையாச்சு.

கருப்பு சாமி
வெள்ளை சாமி
கம்ப்யூட்டர் சாமி
காவிக்குள் புகுந்து
காசு புடுங்கும்
(ஆ) சாமியாச்சு.


கண்ணியமான
மாற்றங்கள்
கண் எதிரே வரட்டும்
வேண்டாத மாற்றங்கள்
வேண்டாம் நமக்கு!

கூர்ப்பு என்பது
பரிணாம
வளர்ச்சியாகட்டும்
பரிநாசத்தின் வளர்ச்சி அல்ல!

எழுதியவர் : சிவநாதன் (7-Jan-14, 12:06 am)
பார்வை : 350

சிறந்த நகைச்சுவைகள்

மேலே