வார்த்தைகளின் மௌனம்

வார்த்தைகளால் விவரிக்க முடியுமா அனைத்தையும், தன் காதல்தூது என்ன பதில் கொண்டுவருமென தவங்கிடக்கும் காதலனின் தவிப்பை, காதலியின் பச்சைக்கொடிக்கு பிரமிப்பில் பேச்சற்று நிற்கும் காதலனின் சந்தோஷத்தை;வருடம் பத்து தவங்கிடந்து தான் பெற்ற பிள்ளை “அம்மா” என்று கூறக்கேட்டத் தாயின் அளவற்ற மகிழச்சியை; தூக்கி வளர்த்த மகனுக்கு தான் கொல்லி வைக்கும் அப்பாவின் சோகத்தை; சொல்லமுடியுமா, அளக்கமுடியுமா வார்த்தைகளால். தோற்றுப்போய் மௌனமாயின வார்த்தைகள், நெஞ்சடைக்கும் துக்கத்தை, மூச்சிரைக்கும் மகிழச்சியை விவரிக்கமுடியாமல், அவற்றை எவராலும் வார்த்தைகளால் கூறமுடியாது, ஆனால் அவற்றை நான் கண்டேன், பலர் கண்களிலே! பலர் கண்களிலே!!.

எழுதியவர் : சதீஷ் ஆதித்யா (9-Jan-14, 12:19 am)
சேர்த்தது : ezhuthukol
பார்வை : 166

மேலே