கவியரசு கண்ணதாசனை வாழ்த்தி வாரியார்

கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு 4 க்கு திருமுருக.கிருபானந்தவாரியார் அளித்த அணிந்துரையில் கவியரசு கண்ணதாசனை வாழ்த்தி அளித்த ஒரு வாழ்த்துப்பா:

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து. - நேரிசை வெண்பா

2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷ கோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்த போது, இந்த நேரிசை வெண்பாவை சேஷகோபாலன் ஹம்ஸத்வனி ராகத்தில் முதலில் பாடினாராம். அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து, சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தாராம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jan-14, 10:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 119

மேலே