நான் பார்த்தால் போதும்

பட்டுப் பாவாடையிலும்
தாவணியிலும்
எனை சந்திக்க
வந்துவிடாதே
என் காதலி...............
சேலையும் கூட
அழகிய உன்
இடுப்புப் பிரதேசத்தை
யார் யாரையோ
திரும்பிப் பார்க்க வைக்கிறது.....
கவர்ச்சி உடையே
சேலைதான்
சேலையும் வேண்டாம்.........
சுடிதாரில்
வந்துவிடு
துப்பட்டாவால்
போர்த்தியபடி.........

ஊரெல்லாம்
பார்க்க வேண்டாம்
உன்னழகை.......
நான் மட்டும்
பார்த்தால் போதும்.

எழுதியவர் : கவியன் (10-Jan-14, 3:56 pm)
சேர்த்தது : Kaviyan
பார்வை : 80

மேலே