Kaviyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kaviyan
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  14-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2014
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதைப் பிரியன்.

என் படைப்புகள்
Kaviyan செய்திகள்
Kaviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2014 12:30 am

வந்தார்கள்
வாழ்த்தினார்கள்
தேர்வைப்
பெற்றார்கள்
வென்றார்கள்
விலகிப் போனார்கள்....!

மேலும்

Kaviyan - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 11:36 am

தித்திக்கும் செங்கரும்பும்
தெவிட்டாத நறுந்தேனும்
எத்திக்கும் புகழ் மணக்கும்
இன்தமிழுக் கிணையாகுமோ?

கங்கை முதல் கடாரம்வரை
கட்டியர சாண்ட தமிழ்
பொங்கல் திருநாளைப்
போற்றி மகிழ்கின்ற தமிழ்

மன்னவர்கள் காத்த தமிழ்
மாற்றாரும் பயின்ற தமிழ்
தென்னவர்கள் வளர்த்த எங்கள்
தீந்தமிழ் போல் வேறுண்டோ?

பன்மொழிகள் படைத்த தமிழ்
பாவலர்கள் வளர்த்த தமிழ்
இன்மொழியாம் நந்தமிழ்க்கு
இணை மொழிகள் வேறுண்டோ?


(1970 ஆம் ஆண்டு பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கும் போது எழுதப்பட்டது)

மேலும்

அருமை அழகு ஐயா 24-Nov-2016 12:23 am
நன்றி நண்பர் ஜமால் அவர்களே 13-May-2014 10:06 pm
சில வரிகளுக்குள் தமிழ்தம் அருமையை அழகாக வார்த்திருக்கிரீர்.!! மிகச்சிறப்பு ஐயா.!! :) 13-May-2014 10:04 pm
நன்றி தமிழ் அழகி அவர்களே. கருத்து சொல்ல வந்து ஒரு இனிமையான கவிதையை தந்தமைக்கு நன்றியும் வாழ்த்தும். தங்கள் மொழிப் பற்றைப் பெரிதும் போற்றுகிறேன். 13-Feb-2014 7:30 pm
Kaviyan - பிரேம பிரபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2014 11:56 am

பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
ஏராளமான ரகசியங்களை
உன்னிடம் மட்டுமே.

ஐந்து வயதில்
குளக்கரைப் படிக்கட்டில் அமர்ந்து
மீன்களுக்குப் பொறி போட
துள்ளி எழுந்த ஒரு விடலை மீன்
என் சுண்டு விரல் கடித்ததை.

முறைப் பெண் என்று
முதலில் அறிமுகமான
மலர்க்கொடிக்குப் பிடிக்காதென்று
பொக்கிஷமாகப் பாதுகாத்த
அரும்பு மீசையை
ரகசியமாக வழித்தெடுத்ததை.

என் இருபது வயதில்
அக்காவிற்குத் திருமணமாகி
மாமாவுடன் செல்ல
அவளைக் கட்டிப் பிடித்து
போகவிடாமல் தடுத்து
தேம்பி அழுததை.

வேலை தேடி பட்டிணம் வந்த பிறகு
விடுதியின் காரை பெயர்ந்த
சுவரோவியங்களில்
அம்மாவின் முகம் கண்டு மகிழ்ந்ததை.

இப்படியாக எல்லாவற்றையு

மேலும்

மிக அருமை ஐயா 21-Jan-2014 9:10 pm
மிக நன்று அய்யா 21-Jan-2014 12:13 pm
எப்போது பகிரப் போகின்றீர்? நினைவுகளில் வாழ்வதும் ஒரு சுகம் தான். நன்று நண்பரே 21-Jan-2014 12:10 pm
ஆம்..... பகிர முடியாத நினைவுகளே.... சிலர் வாழ்கையை நகர்த்துகிறது...... வாழ்த்துக்கள் தோழரே.... 21-Jan-2014 12:02 pm
Kaviyan - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2014 8:14 pm

சிக்கி தவிக்கிறேன் சிலை அழகில்
காதல் தான் காரணமா

வழி பார்த்து சென்ற விழிகளை
இடறிய கல்
இமை நோக்கிய நேரம்
இமைக்கவில்லை நான் - காரணம்
நீ பார்த்த தருணம்
அக்கணம் மட்டுமே !

உன் விழி பார்வை
இதயம் நுழைந்து
வலியை உரமாக்கி - புதிய
உயிரை விதைக்குதடி !!

உயிரை விதைத்தவளே - வந்து பார்
உன் பார்வை படாமல் வாடுதடி
உனக்காக ஓர் உயிர் !

விழி வழி விஷம் வைத்தாய் - அதற்கு
என் உயிரை ஒத்திகை பார்த்தாய் !

விலகி செல்கிறேன்
விருப்பம் இல்லாமல் !
விட்டு செல்கிறேன்
விழிகளை மட்டும் !!

ரசித்து வாழ்வதோ
உன் நினைவில் மட்டும்
சொல்லி கொள்வதோ
நினைவில் நீ

மேலும்

வரவில் மிக மகிழ்ச்சி கார்த்திகா 08-Aug-2014 10:53 pm
உன் இதழ் கூட இமைக்குதடி ! ஏன் இதயம் மட்டும் தடுக்குதடி ? ரசனை அழகு ராஜ்!! 08-Aug-2014 8:47 pm
தங்கள் வரவில் மகிழ்ச்சி தோழமையே ! நன்றி பல ! என்றும் அன்புடன் நான் 12-Feb-2014 5:19 pm
அழகு !!! வாழ்த்துக்கள் தோழா .... 12-Feb-2014 5:10 pm
Kaviyan - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2014 10:14 pm

மதம் ஏற்றால் விழா ரெண்டுதான்
மனம் ஏற்றால் விழா ஒன்றுதான்
ஓணம் கேரளத்தில் எல்லோருக்கும்
ஒன்றுதான்
அது மிகவும் நன்றுதான்

பானைக்கு ஏது மதம்
யார் தப்பினாலும் உருவாகும்
நெருப்பிற்கு ஏது மதம்
யார் எரித்தாலும் சூடு தரும்
நீரிற்கு ஏது மதம்
பானையிலிட்டால் சூடாகும்
அரிசிக்கு ஏது மதம்
கொதிக்கும் நீரிலிட்டால் சோறாகும்
சோற்றிற்கு ஏது மதம்
யார் வயிற்றிலும் அது உணவாகும்

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்
இறுதியில் எல்லோரும் தழுவும் மதம்
ஒன்னுதான் அது மண்ணுதான் !

-----கவின் சாரலன்

மேலும்

இறுதியில் எல்லோரும் தழுவும் மதம் ஒன்னுதான் அது மண்ணுதான் ! புது டெக்னாலாஜில சொன்னா ... மின்சார மயானத்தில் ஒரு பிடி சாம்பல்தான் .. மதம் நெறிப்படுத்தவே..சொல்லுகிறது வெறி பிடித்து அலைய அல்ல படைப்பு சிறப்பு ஐயா !! 22-Jan-2014 10:20 pm
VAAZHTHTHUKKAL VIVEKBHARATHI VALARKA ----ANBUTAN,KAVIN CHARALAN 22-Jan-2014 3:33 pm
பொதுவாக அறிபவன் அறிவாளி கவிதையில் உணர்பவனே அறிவாளி மிக்க நன்றி அக்பர் அப்துல்லா ----அன்புடன்,கவின் சாரலன் 21-Jan-2014 10:13 am
மிக்க நன்றி கவியன் ----அன்புடன்,கவின் சாரலன் 21-Jan-2014 10:09 am
Kaviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 3:56 pm

பட்டுப் பாவாடையிலும்
தாவணியிலும்
எனை சந்திக்க
வந்துவிடாதே
என் காதலி...............
சேலையும் கூட
அழகிய உன்
இடுப்புப் பிரதேசத்தை
யார் யாரையோ
திரும்பிப் பார்க்க வைக்கிறது.....
கவர்ச்சி உடையே
சேலைதான்
சேலையும் வேண்டாம்.........
சுடிதாரில்
வந்துவிடு
துப்பட்டாவால்
போர்த்தியபடி.........

ஊரெல்லாம்
பார்க்க வேண்டாம்
உன்னழகை.......
நான் மட்டும்
பார்த்தால் போதும்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே