எங்கள் தமிழ்

தித்திக்கும் செங்கரும்பும்
தெவிட்டாத நறுந்தேனும்
எத்திக்கும் புகழ் மணக்கும்
இன்தமிழுக் கிணையாகுமோ?

கங்கை முதல் கடாரம்வரை
கட்டியர சாண்ட தமிழ்
பொங்கல் திருநாளைப்
போற்றி மகிழ்கின்ற தமிழ்

மன்னவர்கள் காத்த தமிழ்
மாற்றாரும் பயின்ற தமிழ்
தென்னவர்கள் வளர்த்த எங்கள்
தீந்தமிழ் போல் வேறுண்டோ?

பன்மொழிகள் படைத்த தமிழ்
பாவலர்கள் வளர்த்த தமிழ்
இன்மொழியாம் நந்தமிழ்க்கு
இணை மொழிகள் வேறுண்டோ?


(1970 ஆம் ஆண்டு பி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கும் போது எழுதப்பட்டது)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (14-Jan-14, 11:36 am)
பார்வை : 3849

மேலே