சிக்கி தவிக்கிறேன் சிலை அழகில் - காதல் தான் காரணமா

சிக்கி தவிக்கிறேன் சிலை அழகில்
காதல் தான் காரணமா
வழி பார்த்து சென்ற விழிகளை
இடறிய கல்
இமை நோக்கிய நேரம்
இமைக்கவில்லை நான் - காரணம்
நீ பார்த்த தருணம்
அக்கணம் மட்டுமே !
உன் விழி பார்வை
இதயம் நுழைந்து
வலியை உரமாக்கி - புதிய
உயிரை விதைக்குதடி !!
உயிரை விதைத்தவளே - வந்து பார்
உன் பார்வை படாமல் வாடுதடி
உனக்காக ஓர் உயிர் !
விழி வழி விஷம் வைத்தாய் - அதற்கு
என் உயிரை ஒத்திகை பார்த்தாய் !
விலகி செல்கிறேன்
விருப்பம் இல்லாமல் !
விட்டு செல்கிறேன்
விழிகளை மட்டும் !!
ரசித்து வாழ்வதோ
உன் நினைவில் மட்டும்
சொல்லி கொள்வதோ
நினைவில் நீ இல்லை என்பதை மட்டும் !
உன் இதழ் கூட இமைக்குதடி !
ஏன் இதயம் மட்டும் தடுக்குதடி ?
சிக்கி தவிக்கிறேன்
உன் சிலை அழகில்
காதல் தான் காரணமா - உன்
நினைவில் சொர்க்கம் நான் காண
----காதல் அவளிடம் சொல்லும் முன் இங்கே ----