ஆதவனே பேரழகனே
கதிரவனைக் கண்டேன் காலையிலே
அவன் எழும்பும் அழகைக் கண்டேன் விடியலிலே
மெல்ல மெல்ல மேலே ஏறும் ஓயிலைக் கண்டேன் வைகறையிலே.
செந்நிறத் தன்னோளியை உணர்ந்தேன் உச்சிப் பொழுதிலே
சுடரும் வெப்பத்தை உணர்ந்தேன் மதிய வேளையிலே
தகிக்கும் பகலவனை சட்டென்று உணர்ந்தேன் நடுப் பகலிலே
அறிந்தேன் ஞாயிறுவின் வீச்சுக் குறைவதை சாயரட்சையில்
வண்ணக் குவியலாகப் பாய்ந்தோடும் குளிர்ச்சியை அறிந்தேன் மாலையில்
படிப் படியாக தணியும் நேர்த்தியை புரிந்துகொண்டேன் சாயும் பொழுதிலே
நோக்கினேன் சூரியனை வெகு நேரம் வாய் பிளந்து
மகிழ்ந்தேன் ஒளி விசும் தன்மையைக் கண்டு அகமகிழ்ந்து
பொழியும் ஒளிப் பிழம்பே உன்னை வணங்குகிறேன் மனங் கனிந்து.