புதுப் புறம் நானூறு 10

10. தண்டனையும் அருளும்

வழிபடுவோரின் அன்பினையும்
வன்மை குணம் படைதவரையும்
வஞ்சகக் கொள் மூட்டும்
வழக்கம் தனை கொண்டோரையும்
வகைப் படுத்தி

கொடுமை செயல்செய்யும் மூடர்களை
கொற்றவனே நீ நீதிகளின்
கோட்பாட்டினை படித்து நல்ல தீர்ப்புகளை
கோடி கோடியாய் கொடுப்பாய் !
கொடியவன் உன்னை வணங்கி நின்றால்
கொஞ்சம் அவனை மன்னிப்பாய்
கோல மயிலாடும் உன்னாட்டில்
கொஞ்சிடும் உணவு தந்திடுவார்

தேர்வேந்தே உன்
தேவிகள் தான் ! பகைவன்
தெனரிப்போய் அஞ்சுவதற்கு
தேர்ச்சி அடைந்தது உன் மார்பு !
தேவையற்ற வேலைகள் நிதம் செய்து

திகைத்துப் போகும் வேளையிலே
தின்னமுடையதாய் செயல்கள் நீ
திட்டமிட்டுச் செய்திடுவாய் !
திரண்ட மார்புடைய பேரரசே !

உன்பெருமை பாடி
ஊக்கப் பரிசு பெற
உன்நாடு தேடி வந்தேன்
உன்போல் வள்ளல் இங்கில்லை என்று !

திணை : பாடான்
துறை : இயன்மொழி
பாடியவர் : ஊன் பொதி பசுங்குடையார்
பாடப்பட்டவர் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Jan-14, 3:13 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 95

மேலே