நான் ஊருக்குச் செல்கிறேன்

நான் ஊருக்குச் செல்கிறேன்
கையில் காசில்லாமல்
கையில் பெட்டியில்லாமல்.

நான் ஊருக்குச் செல்கிறேன்
இன்று அல்ல நேற்று அல்ல
எப்போதும் எந்நாளும்

நான் ஊருக்குச் செல்கிறேன்
பார்க்கிறேன் யாவற்றையும்
கண்ணாலே முழுவதுமே.

நான் ஊருக்குச் செல்கிறேன்
பயணமாக வெகு நாட்கள்
ஊர் ஊராகப் போகிறேன்.

தாஜ் மகாலைக் கண்டேன்,
பொற் கோவிலைக் கண்டேன்
வாராணா சியையும் கண்டேன்.

லண்டன் மாநகரைக் கண்டேன்
ஈபில கோ புரத்தைக் கண்டேன்
வெள்ளை மாளிகையும் கண்டேன்.

சீன பெருஞ்ச சுவரைப் பார்த்தேன்
சிட்னி பாலத்தைப் பார்த்தேன்
அமேசான் ஆற்றையும் பார்ததேன்.


மணி நேரங்களில் கண்டு கழித்தேன்
காசில்லாமல் , பறக்காமல், வெளியே போகாமல்.
மனதினிலே கண்டேன் யாவறையும்
படித்ததை நினைவுப் படுத்தி கொண்டு.


நான் ஊருக்குச் செல்கிறேன்
மனதளவிலே வேகமாக
காண்கிறேன் அற்புதங்களை
மனக்கண்ணாலே வெகு விமர்சையுடன்

எழுதியவர் : மீனா Somasundaramm (12-Jan-14, 12:25 pm)
பார்வை : 1328

மேலே