இருளில் முழ்கிய இருளன்

இருட்டிலே துழாவிக் கொண்டு
கும்மிருட்டிலே தடவிக் கொண்டு
காரி ருளிலே தடுமாறிக் கொண்டு
மெதுவாக மிக மெது வாக
நடந்தான் இருளன் .

கையிலே ஒரு தடியுடன்
தட் தட் என்று ஓசை எழுப்பிய படி
பார்த்து பார்த்து நடந்தான்
வேகம் இல்லாமல் மெதுவாக
நடந்தான் இருளன்

விளக்கு ஒன்று இருந் திருந்தால்
வழிக்கு துணை வந்திருக்கும்
தெரியாமல் வருகிறான்
தடுமாறிய படியே மெதுவாக
நடக்கிறான் இருளன்.


பட்ட அறிவும் இல்லை
படிக்கவும் இல்லை காலத்திலே
இருந்தும் பகட்டில் குறைவில்லை
வீழ்ந்து எழுந்தும் புத்தியில்லை
நடக்கிறான் இருளன்.


ஒளி என்பது இங்கே
அறிவொளி என்றே கொள்க
கல்வியின் மேன்மையை அறியாமல்
இருளில் முழ்கிய இருளனின்
நிதர்சனத்தைக் கண்டீர் இப் பாவாக்கத்தில்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-Jan-14, 9:14 am)
பார்வை : 528

மேலே