விலங்காக வாழ விரும்புகிறேன்

மட்டிப் பன்றியும்--தனது
குட்டியைக் குப்பைத்
தொட்டியில்
கொட்டிய தில்லை---

பாம்புகளும் தேள்களும்
கூட்டமாய்க் கூடி வந்து
ஆறறிவுச் சாதியோடு
போரிட்ட தில்லை---

புல்லைத் தின்று வாழும்
புலிகளும் இல்லை---
பல்லைக் காட்டி வாழும்
எறும்புகளும் இல்லை--

4. முட்டை யிடவே
முடியா தென்று
பெட்டைக் கோழி
தட்டிய தில்லை---

. தொழுநோய் தழுவிட
அழகினை இழந்தே
அழுது வடியும்--ஒரு
கழுதையும் இங்கில்லை--

. உள்ளதை எல்லாம்
அள்ளி எடுத்துஉள்ளே
தள்ளித் தள்ளாடும்--ஒரு
புள்ளினம் இங்கில்லை---

கொழுநீரின் அளவது கூடி
உடலது பருத்துக்--குருதி
அழுத்தம் அழுத்தி வருத்த
மூட்டு வலியும்--வந்து
மாட்ட வாட்டமுறும்
யானை யைத்தான்
காண முடியுமா?

8. சர்க்கரையின்
குறைநிறையால்
சங்கடப்படும்
விலங்கினத்தைச்
சந்தித்ததோர் நிகழ்வுண்டா?

9. மார டைப்பால் மாண்டு
சாய்ந்த சிங்கமும் இல்லை--
வீழ்ந்த மானும் இல்லை--
மாய்ந்த மயிலும் இல்லை---

1 தற்கொலை
செய்து கொள்ளும்
தறுதலை விலங்கினம்
தரணியில் இருக்கிறதா?

1 தூங்கி வழிந்து
சோம்பிக் கிடந்து
சுறுசுறுப்பு இழக்கும்
குருவியும் இருக்கிறதா?


1 எருமை போலக்
குதிரை நடப்ப தில்லை--
குதிரை போல
எருமை ஓடுவ தில்லை--


1 தெருநாய் எதுவும்
வருந்தி வாடி அழுது
புலம்பி அரற்றி
உலாவருதல் உண்டா?

1 பக்கவாத நோயால்
படுத்துக் கிடக்கும்
ஆடுமாடு மீன்கள்
பூமியில் உண்டா?

1. எய்ட்சு நோயால்
எமனோடு போராடும்
நரியும் இல்லை---
சிறுகுயிலும் இல்லை--

6. நன்றி மறக்கும்
நாயும் இல்லை--
தனியாய் இரைதின்னும்

தன்னலக் காக்கையும்
மண்ணில் இல்லை--
பிறன்மனை நோக்கும்
புறாவும் இல்லை--

1. அஃறிணை உயிர்களுள்
எதுவும்--என்றும்
ஊழலும் செய்யாது--
கையூட்டு வாங்காது--
மோசடியில் இறங்காது--
சாராயம் குடிக்காது--
சாய்க்கடையில் விழாஅது--

8. ஊரை அடித்தே
உலையில் போடாது--
சாகும்வரை தன்னில்பை
மாற்றவே மாற்றாது--

1. சாலச் சிறந்தஓர் சாதிஅது--
மானிடச் சாதிக்குக் குருஅது--

எழுதியவர் : பேராசிரியர் (12-Jan-14, 7:39 am)
பார்வை : 76

மேலே