பயனுள்ள அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்

தெரிந்து கொள்வதற்காக இதோ எளிய வீட்டு உபயோகக் குறிப்புகள்:-

பாதுகாப்பு:

* அந்துப் பூச்சி வராமலிருக்க நெல் மூட்டையைச் சுற்றிலும், அதன் இடுக்குகளிலும் புங்கை இலை, வேப்ப இலைகளை பறித்துப் போட்டு வைக்கவும்.

* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

* புளியை நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ள பானையில் போட்டு வைக்கவும். பானையின் அடியில், புளியைப் போட்டு அதன் மேல் கொஞ்சம் உப்பைத் தூவினால் புளி கெடாமல் இருப்பதோடு, காய்ந்து போகாமலும் இருக்கும்.

* மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமாயின் நறுக்கி, வெயிலில் காய வைத்து வற்றல் போல் உலர்த்திக் கொள்ளவும். பின் எப்போது ஊறுகாய் வேண்டுமோ அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.

* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைப் போட்டு வைப்பதால், பல நாட்கள் கெடாமல் இருக்கும்.


சமையல்:

* காலிப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காளிப்ளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்து விடும்.

* தோசைக்கு, இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை, இட்லி பூவாயிருக்கும்.

* சாதம் மிஞ்சி விட்டால், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும் போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வேக வைக்கலாம்.

* காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும்.

* போளி தட்டும் வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

* கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர் உறையாது. எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது பாத்திரத்தை வைத்தால் தயிர் விரைவில் உறைந்து விடும்.

* தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

* உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.

* கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.

* வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டால் பாகு முற்றாது.

* வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்­ரில் போட்டு உரிக்கவும். கண்ணும் கரிக்காது.

* புளித்த தயிரை தலையில் தேய்த்துக் கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

* தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.

* தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

* சமையலுக்குப் பின் எஞ்சியிருக்கும் இஞ்சியை மண்ணில் புதைத்து வைத்தால் வேண்டும் போது எடுத்துக் கொள்ளலாம்.

* குளிர் சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் கருவேப்பிலை, கொத்தமல்லிகளை பாட்டில்களில் போட்டு வைக்கலாம்.

* சமையலறையின் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களை குறித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

* கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்த பின் ஓவன் சூடாகவே இருக்கும். அப்போது சிறிது பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிது போல் முரமுரப்பாக இருக்கும்.


துணிமணிகள்:

* துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்தால் நீலம் ஒன்று போல் தண்­ரில் பரவும்.

* நீலம் கலந்த நீரில் பாத்திரம், கண்ணாடி, பாட்டில் முதலியவற்றைக் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

* வெள்ளை நிற சட்டைகளை, நீல நிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

* பட்டுப் புடவைகளை துவைக்கும் போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் சாயம் போகாமலும் பூச்சி வெட்டாமலுமிருக்கும்.

* டீக்கரையைப் போக்க சீனியை உபயோகிக்கலாம். வெள்ளைத் துணிகளில் உள்ள கரையைப் போக்க தண்­ரில் ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உபயோகிக்கலாம்.

* டாய்லெட் சோப் மேலுரைகளை துணி அலமாரிகளில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும்.

* எண்ணெய் கறையை போக்க துணியின் மேலும் கீழும் ப்ளாடிங் பேப்பரை வைத்து அயர்ன் பண்ண வேண்டும்.

* ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

* பழைய துணிகளையும் நன்கு சலவை செய்து, மடிப்புக் கலையாமல் அலமாரிகளில் அடுக்கி வையுங்கள். அல்லது பழைய சூட்கேஸ், பிரயாணப் பைகளில் சேமித்து வைக்கவும்.

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 8:52 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே