முக்கு கண்ணாடி காதல்

பெண்மை அவள் எடுக்கும் போது
மென்மை ஆகிறேன்

பெண்மை அவள் துடைக்கும் போது
தூய்மை ஆகிறேன்

பெண்மை அவள் அணியும் போது
பொம்மை ஆகிறேன்

பெண்மை அவள் பார்க்கும் போது
வெண்மை ஆகிறேன்

பெண்மை அவள் படிக்கும் போது
மொனம் ஆகிறேன்

பெண்மை அவள் அசைக்கும் போது
கண் மை ஆகிறேன்

பெண்மை அவள் கழட்டும் போது
கண்ணீர் ஆகிறேன்

பெண்மை அவள் உறையில் வைக்கும் போது
கவிதை ஆகிறேன்

( முக்கு கண்ணாடி காதலுக்கு என் பதில் (பாகம் - 2)
(no : 171427)
)

எழுதியவர் : PAUL (14-Jan-14, 7:46 pm)
பார்வை : 564

மேலே