நுளம்பும் மனிதனும்
என்னை
சுத்தி சுத்தி வட்டமிட்டு
இசை பாடி வருகிறாய்
நுளம்பே உனக்கு
என் மேல் காதலா?
தூக்கத்தில் கூட
காதுக்குள் இசைக்கிறாய்
என் மேல் அவ்வளவு
பிரியமோ ?
நானா இசை பாடுகிறேன்
நான் பாடும் வசை
உனக்கு இசையாக
கேட்கிறதா ?
காதல் மயக்கத்தில்
இசை பாடி அடிக்கடி
முத்தம் இடுகிறாய்
அதை தாங்கும்
பொறுமை எனக்கில்லை
என் முத்தம் அவ்வளவு
இனிக்கிறதா?
அதனாலா உன் விரல்கள்
முந்திக் கொள்கின்றன
ஒ!..
உன்னை இரவில் வதைத்து
இரத்தம் குடிப்பதற்கு
பெயர்தான்
காதலா?...

