சரித்திரம் படைக்கலாம் வா
சரித்திரம் படைப்போம்! தரித்திரம் துடைப்போம்! வாடா மச்சி வா!
செவ்வாயில தண்ணீ எடுப்போம் புளூட்டோவுல கால பதிப்போம்
சோறூ தண்ணீ தேவை இல்ல பொண்ணு மண்ணு தேவை இல்ல
காலம் நம்ம காலடியில வாட மச்சி வா!
உன் காலடி கீழ தான உலகம்_ அதை
ஆள்வோம் நாம தினமும்!
யுத்த சண்ட தேவை இல்ல_காசு பணம் தேவை இல்ல
நல்ல மனசு மட்டும் போதும் மச்சி!
நீ நெனச்ச நல்ல சேதிய நாலு பேருக்கு சொல்லு மச்சி!
உலகம் உனக்கு பின்னால் மச்சி! நெஞ்ச நிமித்தி நில்லு மச்சி!