தமிழன் விருதுகள்

விந்தைகள் ஆயிரம் நிகழும் காலமோ
உண்மையான வீரத்தை உலகம்தான் மறக்குமோ
என்தமிழ் மக்களின் வீரம்தான் பொய்க்குமோ
யாதொரு விளையாட்டும் இதைத்தான் வெல்லுமோ...

கால்வித்தை காட்டிடும் கால்பந்து ஆட்டமும்
கைவித்தை காட்டிடும் கைப்பந்து ஆட்டமும்
மட்டையால் ஆடிடும் மற்ற விளையாட்டும்
மாட்டுடன் ஆடுவதற்கு இணைதான் ஆகுமோ ........

வெள்ளமென பொங்கிடும் என்தமிழ் வீரனின்
வீரம்தான் அடக்குமே விரைந்திடும் காளையை
உயிர்தனை துச்சமாய் உணர்ந்த யாவரும்
உயர்த்திட நினைப்பது தமிழனின் மரபினை ........

வேல்கொம்பு பாய்ந்து வீழ்ந்தவர் பலருண்டு
மார்கொண்டு பிடித்து வென்றவர் பலருண்டு
உயிர்பல இழந்தும் ஒருத்தர்க்கும் பயமில்லை
இவர்கொண்டு அடைக்கிடும் வீரத்திற்கு இணையில்லை..

உலகார் போற்றிடும் ஆட்டங்கள் பலவுண்டு
ஊடகங்கள் காட்டிடும் ஆட்டமும் பலவுண்டு
கோடியும் லட்சமும் புழங்கிடும் இங்குதான்
புகழில்லாமல் போகுது என்தமிழ் வீரம்தான் ...........

அறிவிக்கும் விருதெல்லாம் அத்தனையும் பொய்யேதான்
அதற்க்கு தகுதியானது ஜல்லிக்கட்டு ஒன்றேதான்
உயிர்தனை பணயமாய் வைத்திடும் ஆட்டத்திற்கு
உலகிலே இணையாய் ஒன்றுமே இல்லையே .........

தமிழனின் விருதென்று தனியே தொடங்கிட்டு
தனியே அதற்கென நிதியினை ஒதுக்கிட்டு
வென்றிடும் வீரர்க்கு விருதுகள் வழங்கியே
உலகறிய செய்திடுவோம் தமிழனின் வீரத்தை .......

நம்முடைய மரபினை நாமே காத்திட்டு
நலம்பலவும் அதற்கென நாமே செய்திட்டு
தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திட்டு
ஒற்றுமையாய் வாழுவோம் "நாம் தமிழன் என்றிட்டு" ....

எழுதியவர் : வினாயகமுருகன் (15-Jan-14, 10:44 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 153

மேலே