இதயத்தைக் காட்டும் தமிழ்க் கவிதை
சிரிக்கவைக்கும் சில கவிதை
சிந்திக்கவைக்கும் சில கவிதை
அத்தி பூப்பதுபோல் நற்கவிதை
அது நல்மனம் காட்டும் தமிழ்க் கவிதை....
இயலாமை காட்டி சில கவிதை
இதயத்தை தூக்கிலிட்டு சில கவிதை
எப்போதும் இகழ்ச்சியாய் சில கவிதை
இதயத்தை இணைக்கும் சில கவிதை........
வெஞ்சினம் கொண்டு சில கவிதை
தப்புக் கணக்குடன் சில கவிதை
எளியவரை ஒடுக்க சில கவிதை
ஏட்டிக்குப் போட்டியாய் சில கவிதை..........
கயவரின் அகம்காட்டும் சில கவிதை
ஆழ்ந்து படித்தால் புரியும் சில கவிதை
அவரவர் முகம் காட்டும் சில கவிதை
கவியின்றி பறக்கும் சில கவிதை..........
மனச்சாட்சியைத் தொலைத்து சில கவிதை
மலரின் நறுமணம் விடுத்து சில கவிதை
சமூகத்தைப் படிக்க சில கவிதை
அத்தனையும் உணர்த்தும் `எழுத்து` கவிதை...
கவிப் போர்வையில் வலம்வரும்
தீயதை விலக்கி நல்லதை எடுத்து
இலக்கை நோக்கிப் பயணித்தால்
வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே .....!!

