உழவர் திருநாள்
உழவர் திருநாள்
உழவருக் கொருநாள் திருநாள்
உழைப்பவர் அறுவடை பெறும்நாள்
உலகினில் முதல்முதல் திருநாள்
உணவினை தருபவர் பெருநாள் (உழவரு)
தழல்தனில் பழையன விடும் நாள்
தையினை மார்கழி தொடும் நாள்
பழையன கழித்திட வரும் நாள்
பழையன போ(க்)கித் தரும் நாள் (உழவரு)
பகலவன் இறைஎன தொழும் நாள்
பகுத்தறிவு வாதியும் தொழும் நாள்
சகலரும் இணைந்திடும் திரு நாள்
தமிழரின் தமிழ்தை முதல்நாள் (உழவரு)
எருதையும் துதித்திடும் ஒருநாள்
ஏரையும் வணங்கிடும் ஒருநாள்
வரும் தை பொங்கல் மறு நாள்
மாட்டுப் பொங்கல் திருநாள் (உழவரு)
------------------------------------------
சு.அய்யப்பன்,109,திருவள்ளுவர் நகர்,கோவில்பட்டி.
9843849133