குற்றப்பதிவு

பெருநகர இரவுகளில்
விபச்சாரம் செய்கிறார்களாம்
கைது செய்யப்படும் அரவாணிகள்!

ஆண்கள் சிறையில் அடைப்பதா?
பெண்கள் சிறையில் அடைப்பதா?

ஆண்கள் சிறையெனில்
அரவாணிக்கு ஆபத்து
பெண்கள் சிறையெனில்
இரண்டும் கெட்டானை நம்பக்கூடாது
பெரிய குழப்பம் காவலர்களுக்கு.

ஈ தின்ற பல்லியொன்று
முக்கிப்போடும் எச்சம்
குறி தவறாமல் விழுகிறது
குற்றப்பதிவேட்டில்!

எழுதியவர் : ஞா. குருசாமி (16-Jan-14, 5:57 pm)
பார்வை : 113

மேலே