காற்றுக்கென்ன வேலி
இயற்கையாய்
செயற்கையாய்
உருவாகும் காற்றுக்கு
எதற்கிந்த வேலி..........
முகமூடியிட்ட உலகம்
எதிர்த்து உன்முன்னே
திரண்டு வந்தாலும்
உள்ளத்திலில்லை வலி........
உன் எண்ணத்தில்
நேர்மையிருந்தால்
பொல்லாப் புலையரால்
என்றுமே வராது கிலி.......!!!