G GURUSAMY - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  G GURUSAMY
இடம்:  Madurai
பிறந்த தேதி :  15-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Nov-2013
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  20

என்னைப் பற்றி...

கல்வியாளர், எழுத்தாளர்.

என் படைப்புகள்
G GURUSAMY செய்திகள்
G GURUSAMY - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 10:04 pm

உயர்ந்த மலைகளில் உருவாகி
கல்லிடுக்குகளைச் சுழித்து
விரைந்தோடுகிறது நதி

மரத்தை அரவணைத்து
புல்லைப் பிடிங்கி
போக்கைத் தொடர்கிறது
மரத்தின் ஆர்ப்பரிப்பில்
புல்லின் ஓலம்
நதிக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

பள்ளங்களில் பாய்ந்து நிரம்பி
தாண்டிச் செல்கிறது
முதலைகள் வாழ்கின்றன.

பெரும்பாம்புகளை உழற்றினாலும்
கரையேற்றிவிடுகிறது
எறும்பு கருவண்டுகளை
ஊர்வலம் நடத்தி
வளைவு ஒன்றில் சமாதியாக்குகிறது.

அணைகளால் தடுக்கப்பட்டு
ஆணைகளால் திறக்கப்பட்டு
பயணப்படுகிறது.

மேட்டு நிலத்திற்கு
அறிவிப்பு மட்டும் வருகிறது
நதி கரைபுரண்டு ஓடுவதாய்.

மேலும்

அணைகளில் அடைக்கப் பட்டு ஆணைகளால் திறக்கப் பட்டு நல்ல கற்பனைச் சிறகு விரிப்பு. சகோ. 09-Feb-2014 10:30 pm
G GURUSAMY - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 9:43 pm

அவசரகதியில்
வேலைக்குச் செல்லும் பெற்றோரின்
பிள்ளைகள்
அம்மா என்று அழைக்கிறார்கள்
ஆயாவை.

மேலும்

G GURUSAMY - G GURUSAMY அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2014 9:46 pm

திணறித்தான் போகிறேன்
சில நொடிகள் தனித்திருந்தாலும்

நினைவுகளும் உணர்வுகளும்
நீங்கி நிற்கும் தூக்கத்திலும்
என் மீதும் எனக்குள்ளும் நீ பரவ
ஒன்றாகவே படுத்திருக்கிறோம்

சிரிப்பின் கெக்கலில்லும்
கோபத்தின் கொதிப்பிலும்
பயத்தின் வீரிடலிலும்
மெளனத்தின் நிசப்தத்திலும்
நீயின்றி நான் இருந்ததில்லை

சில உறவுக்கென வாழ்ந்தாலும்
மறக்க முடியாது
நம் உறவை.

புரிதல் நிகழுந்தோறும்
தீவிரமாய் அதிகரிக்கிறது
உன் மீதான என் காதல்

மூச்சே நீ தான்
முக்கியம் எனக்கு.

மேலும்

நன்றி 09-Feb-2014 9:41 pm
அருமை 22-Jan-2014 4:23 pm
G GURUSAMY - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2014 9:46 pm

திணறித்தான் போகிறேன்
சில நொடிகள் தனித்திருந்தாலும்

நினைவுகளும் உணர்வுகளும்
நீங்கி நிற்கும் தூக்கத்திலும்
என் மீதும் எனக்குள்ளும் நீ பரவ
ஒன்றாகவே படுத்திருக்கிறோம்

சிரிப்பின் கெக்கலில்லும்
கோபத்தின் கொதிப்பிலும்
பயத்தின் வீரிடலிலும்
மெளனத்தின் நிசப்தத்திலும்
நீயின்றி நான் இருந்ததில்லை

சில உறவுக்கென வாழ்ந்தாலும்
மறக்க முடியாது
நம் உறவை.

புரிதல் நிகழுந்தோறும்
தீவிரமாய் அதிகரிக்கிறது
உன் மீதான என் காதல்

மூச்சே நீ தான்
முக்கியம் எனக்கு.

மேலும்

நன்றி 09-Feb-2014 9:41 pm
அருமை 22-Jan-2014 4:23 pm
G GURUSAMY - G GURUSAMY அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 4:55 pm

ஞாயிறு தோறும்
குடும்பத்தோடு படம் பார்ப்போம்

முதலிரவு காட்சி வரும்போதெல்லாம்
எழுந்து போய்விடுவாள் அம்மா.

ஜன்னல் வழி வானம் பார்த்து
மழைவரக் கூடும் என போய்யுரைப்பார் அப்பா.

எஸ்.எம்.எஸ் அனுப்புவதாய்
கவனத்தைத் திருப்புவாள் அக்கா.

கட்டிப்பிடித்து உருளுவதை
இமைக்காமல் பார்ப்பர் தம்பியும் தங்கையும்

ஞாயிறு தோறும்
குடும்பத்தோடு படம் பார்ப்போம்

மேலும்

நான் கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்..! 21-Jan-2014 9:46 pm
ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் நம்மை வளர்க்கும். இந்த மாதிரி விமர்சனங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இந்த மாதிரி விமர்சனங்களுக்குப் பதில் எழுதுவதை நான் கேவலமாகவும் நினைக்கிறேன். 21-Jan-2014 9:34 pm
நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லையே..!!!! ஹா..ஹ...! 20-Jan-2014 6:04 pm
G GURUSAMY - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 4:28 pm

தலை திருகி
கை ஒடித்து
கால் மடக்கி
காது கடித்து
கண்ணைக்குத்தி
மீசை வரைந்து
தூக்கில் போட்டு
மண்ணுக்குள் புதைத்து
திரும்பத் திரும்ப தோண்டிப் புதைத்து
உண்மை உருவம் சிதைந்த பிறகும்
அழகாகவே தெரிகின்றன பொம்மைகள்
குழந்தைகளுக்கு.

மேலும்

G GURUSAMY - G GURUSAMY அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2014 12:43 pm

பூட்டிய அறையெங்கும்
பறந்து திரிந்த பட்டாம்பூச்சி
ஜன்னல் கண்ணாடியில் வந்தமர்ந்தது

ஒளிந்திருந்த பல்லி
மெல்ல இறங்கிவந்து
படக்கெனக் கவ்வியது

அடுத்தடுத்து உதிர்க்கப்பட்டன
பட்டம்பூச்சியின்
கால்களும் உயிரும்

இறகை ஒதுக்கி
சடலத்தை உட்கொண்டு
நகர்ந்துவிட்டது பல்லி

மிரட்சியுடன்
அமர்ந்திருக்கிறேன்
உலக அறையில்!

மேலும்

இன்றைய அதிகாரவர்கத்தின் அடாவடித்தனம் சிறு உவமையால்..! 20-Jan-2014 8:20 pm
படைப்பை மட்டுமே விமர்சியுங்கள். மற்றவை வேண்டாம். 20-Jan-2014 4:08 pm
நீ ஞா. குருசாமி யா அல்லது ஞாந குருசாமி யா - உலக அறையில் ஞானம் பெற்றதை போல் ! 20-Jan-2014 12:51 am
நன்றி 19-Jan-2014 4:45 pm
G GURUSAMY - G GURUSAMY அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2014 9:20 pm

அழகாய் பிறந்தால்
நடிகையாகலாகம்
மாடலிங் செய்யலாம்
தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கலாம்
விமான பணிப்பெண்ணாகலாம்
நட்சத்திர விடுதிகளில்
வரவேற்பு பொம்மையாகலாம்
குறைந்த பட்சம்
உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு
விருது வழங்கும் விழாவில்
பொன்னாடை ஏந்திவரும்
மேடைப் பெண்ணாகலாம்

எட்டாம் வகுப்பு ஃபெயிலாகி
எறுமை மேய்த்து
அறுவடை வயலில்
சிந்திய கதிர் பொறுக்கி
வெயிலையும் ஆடையாக உடுத்தும் அக்காவை
பிள்ளைகள் கேட்கிறார்கள்
“அம்மா நீ ஏன் டி.வி – ல வரமாட்டேங்குற”?

மேலும்

அது பொய்யழகு... இது மெய்யழகு..! வந்து போகாது..! நிரந்தரமாய் என்றும்..எப்போதும்..! 19-Jan-2014 2:49 pm
வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி 18-Jan-2014 4:31 pm
நல்ல கரு... 17-Jan-2014 10:24 pm
நல்ல கவிதை... 17-Jan-2014 10:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே