வேறொரு உலகம்

தலை திருகி
கை ஒடித்து
கால் மடக்கி
காது கடித்து
கண்ணைக்குத்தி
மீசை வரைந்து
தூக்கில் போட்டு
மண்ணுக்குள் புதைத்து
திரும்பத் திரும்ப தோண்டிப் புதைத்து
உண்மை உருவம் சிதைந்த பிறகும்
அழகாகவே தெரிகின்றன பொம்மைகள்
குழந்தைகளுக்கு.

எழுதியவர் : ஞா. குருசாமி (20-Jan-14, 4:28 pm)
சேர்த்தது : G GURUSAMY
Tanglish : veroru ulakam
பார்வை : 61

மேலே