வெற்றிடப் பொருண்மைகள்

யாரும் இல்லாத போது
எப்போதாவது
வீடு பெருக்கத் தோன்றும்

பாட்டியின் தலையணை முடிச்சு
தாத்தாவின் வெற்றிலை உரல்
அப்பாவின் அழுக்குப் பனியன்
அம்மாவின் ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்
அக்காவின் ஹேர்ப்பின்
அண்ணனுக்கு நண்பன் கொடுத்துச்சென்ற
பத்திரிகை என

ஏதாவது
பார்க்கும் படியாய்
கீழே கிடந்து
எல்லோரும்
வீட்டுக்குள் இருப்பதாகவே உணர்த்தும்

எழுதியவர் : ஞா. குருசாமி (20-Jan-14, 4:27 pm)
சேர்த்தது : G GURUSAMY
பார்வை : 41

மேலே