எனக்குள் பரவும் நீ
திணறித்தான் போகிறேன்
சில நொடிகள் தனித்திருந்தாலும்
நினைவுகளும் உணர்வுகளும்
நீங்கி நிற்கும் தூக்கத்திலும்
என் மீதும் எனக்குள்ளும் நீ பரவ
ஒன்றாகவே படுத்திருக்கிறோம்
சிரிப்பின் கெக்கலில்லும்
கோபத்தின் கொதிப்பிலும்
பயத்தின் வீரிடலிலும்
மெளனத்தின் நிசப்தத்திலும்
நீயின்றி நான் இருந்ததில்லை
சில உறவுக்கென வாழ்ந்தாலும்
மறக்க முடியாது
நம் உறவை.
புரிதல் நிகழுந்தோறும்
தீவிரமாய் அதிகரிக்கிறது
உன் மீதான என் காதல்
மூச்சே நீ தான்
முக்கியம் எனக்கு.